கோவை : கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்காக பிங்பாங் அறிவியல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை கொடிசியா புத்தகத் திருவிழா கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பள்ளி மாணவர்களுக்காக பிரபல யூடியூப் சேனல் எல்.எம்.இ.எஸ். அகாடமி வழங்கும் பிங்பாங் அறிவியல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியலை ஒரு ஆர்வத்தோடு கற்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில், எல்.எம்.இ.எஸ். அகாடமியின் தலைவர் பிரேம் ஆனந்த் பேசுகையில், "இன்று விஞ்ஞான வளர்ச்சியில் அறிவியல் செல்போன் வடிவில் உள்ளங்கை வரை வந்து விட்டது. அதன் வழியாகவே அறிவியல் பற்றின விழிப்புணர்வு அடையலாம். செயல்முறையாக படித்தால் அறிவியலை அறிந்து கொள்வது எளிது," என்று பேசினார். பின்னர் சில செயல்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.

அதாவது, மாணவர்களை பலத்த சத்தமிடச் செய்து, அந்த சப்தத்தின் அதிர்வுகளை செல்போனில் உள்ள ஓர் செயலி மூலம் கணக்கிட்டு மாணவர்களுக்கு ஒலி அதிர்வலைகள் பற்றிய தத்துவங்கள் பற்றியும், அதன் செயல்முறை பற்றிய விளக்கங்கள் அளித்தார். பின் அடுத்த செயல்முறையாக காற்றின் அழுத்தங்கள் பற்றின பார்வையில் முதலில் மாணவர்களின் சொந்த வாழ்வியலில் நடக்கும் சில விஷயங்களைக் கொண்டு அதனை பற்றி விவரித்தார். பின் ப்ளோவரை கொண்டு ஊதி ஒரு பொருளின் மீது காற்றின் அழுத்தமானது எப்படி பட்டதாக இருக்கும் என்பதை பெர்னாலின்( bernalin) தேற்றத்தின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார். அடுத்து வேதியியல் பற்றின செயல்முறைகளுக்குள் சென்ற அவர் மனித உடலில் நடக்கும் வேதியல் மாற்றங்களை எடுத்துக்காட்டாக விளக்கி கூறினார்.
நம் உடலின் வயிற்று பகுதியில் வாயு உருவாதல் பற்றின ஓர் எடுத்துக்காட்டை காட்டி ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) ஒரு குடுவையிலும், அதனுள் பொட்டாசியம் அயோடின் சேர்க்கப்படும்போது, ஹைட்ரன் பெராக்சைடு ஆவியாதலை மாணவர்கள் முன் செய்து காட்டினார். மேலும், மையநோக்கு விசை மற்றும் மைய விலக்கு விசை போன்றவற்றை எளிமையான செயல்பாடுகள் மூலம் செய்து காட்டினார். மேலும், cornado எனப்படும் சுழல் எந்திரம் கொண்டு காற்றழுத்த தாழ்வு நிலையின் போது சுழல் உருவாகும் விதத்தையும் செய்து காட்டி விளக்கம் அளித்தார். இதில், கோவையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோவையின் அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து 100 அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளனர். அதற்கான நிதியினை ராஜசேகர் (ஆளுநர் நியமன நிலை ரோட்டரி) 100 அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.